பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி
பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி
வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச்சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_
சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு
டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான
அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக்கு
மிகவும் நல்லது.
அறுகம்புல் சாறு 50 மில்லி
எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும்
காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர கண் குறைபாடுகள்
சரியாகும். பொதுவாக கல்லீரலுக்கும், கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும்.
அதற்குக்
கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும்
200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள்,
மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வெயிலில்
சென்றாலே கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சி என பாடாய்படுத்தும்.
கோடை
காலத்தில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம் தலை
சுத்தமாக... சுகாதாரமாக இல்லாமையே! தலையை சுத்தமாக வைத்துக் கொண்டால்
கண்களை எப்போதும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம். அதேபோல், வைரஸ்
மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும்.
கோடை
காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். தலையில் பொடுகு
மற்றும் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளவும். அப்படி தலை சுத்தமில்லாமல்
இருக்கும் பட்சத்தில் கண் இமை, புருவம் ஆகியவற்றில் படிந்து, இமையின்
அருகில் இருக்கும் சுரப்பிகளில் சீழ் பிடித்து, வெயிலில் அரிக்க
ஆரம்பிக்கின்றன.
ஆகையால் தலையை, முகத்தை சுத்தமாக,
சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். கண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள்
கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க
வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள்.
சிலருக்கு
கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில்
கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண்
மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த
கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும்.
கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை
குளிப்பது மிகவும் நல்லது.
No comments:
Post a Comment