Pages

Sunday, 16 December 2012

இஞ்சி மருத்துவ குணம்

 என்ன இருக்கு : கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது
: எல்லோருக்கும். அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிக நல்லது.

பலன்கள் : வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போய்விடும். இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகச் செயலாற்றுகிறது.

பித்தத்தை தணிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

No comments:

Post a Comment