Pages

Sunday, 16 December 2012

பழங்களில் உள்ள சத்துக்கள்

 மாம்பழம்...
 
வைட்டமின் ஏ, 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி,சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
 
ஆரஞ்சுப் பழம்...
 
வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி,கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.
 
பப்பாளிப் பழம்...
 
வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.
 
நெல்லிக்கனி...
 
வைட்டமின் சி 600 மி.கி., கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ,பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும். வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
 
கொய்யாப்பழம்...
 
வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது. ரத்த ஓட்டம் சீர்பட உதவும். பற்களுக்கும் உறுதிதரும்.
 
சாத்துக்குடி...
 
வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன.வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
 
எலுமிச்சை...
 
கால்ஷியம் 70 மி.கி., வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன.அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.

No comments:

Post a Comment