Pages

Sunday, 16 December 2012

ஒற்றைத் தலைவலியா?

 ஒற்றைத் தலைவலியால் தற்போது பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒற்றைத் தலைவலிக்குக் காரணம் அதிகமான மன அழுத்தமே. வளைந்து கொடுக்காத தன்மையும், மிகுந்த கண்டிப்பும் உள்ள பலருக்கு ஒற்றைத் தலைவலிப் பிரச்சினை இருக்கிறது. மேலும் ஒற்றைத் தலைவலிக்கும் வயிறு, பார்வைக்கும் முக்கியத் தொடர்பு இருக்கிறது.

எனவே வயிற்றைச் சுத்தமாக வைத்திருப்பதும், கண்களைப் பாதுகாப்பதும் முக்கியம். பொதுவாக, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம், ஓய்வு இல்லாமை, அதிகப்படியான மது, புகைப் பழக்கம் போன்றவையும் ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக அமைகின்றன.

ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்களுக்கு, இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிற்றுக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் ஒருவர், எதனால் அது ஏற்பட்டது என்று அறிந்து அதன்படி தீர்வு காண வேண்டும். ஒற்றை தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:

* வைட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுக் கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

* இரண்டு- மூன்று நாட்களுக்கு பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை மட்டும் பருகலாம். நீர் அதிகமாக அருந்த வேண்டும்.

* இரவில் தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் நெற்றிப் பொட்டில் ஒத்தடம் தரலாம்.

* தலையில் இறுக்கமான துண்டையோ, பட்டையோ கட்டிக்கொள்ள வேண்டும். தவிர்க்க வேண்டியவை:

* புகை, மது. இவை தலைவலியைத் தூண்டக் கூடியவை.

* வெயிலில் அலைவது.

* காரமான உணவு வகைகள்.

* வயிறு நிறையச் சாப்பிடுதல்.

* தேவையில்லாத மனஅழுத்தம், கவலை.

No comments:

Post a Comment