கீரைகளின் ராணி கறிவேப்பிலையாகும்.
கறிவேப்பிலை
மரத்தில் இருந்து கிடைப்பதால் உயரத்தில் வளர்வதால் பஞ்ச பூத சக்திகள்
மிகுந்து உள்ளது. மலிவாக எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனிதன் சாப்பிட
வேண்டிய கீரைகளில் கறிவேப்பிலை முதன்மை பெறுகிறது.
கறிவேம்பு,
கரிப்பிலை, கறியபிலை, கருவேப்பிலை என்றும் அழைக்கின்றனர். நல்ல மணம்,
மருத்துவக்குணம் நிறைந்த கீரை. சமைக்காமல் சாறாக அருந்தினால் நீரிழிவு
குறையும்இதன் உண்மையான பெயர் கறிவேப்பிலை தான்.(aaku means leaf)
இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.
உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.
கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும். நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.
பூக்கள் கொத்தாக அமைந்திருக்கும், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும். புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.
வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலைத்தடுக்கும்
சக்கரை வியாதிக்கு நல்ல மருந்து இதன் இலை சாறு என கண்டறியப்பட்டுள்ளது இதன் ஈர்க்கு, இலை பட்டை வேர் முதலியை யாவும் மருத்துவ குணம் உடையவை.
ஈர்க்கு ,இலை பட்டை வேர் இவைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டால் பித்தம் ,வாந்தி முதலியவை நீங்கும் இதன் .ஈர்க்கு சுக்கு, சீரகம், ஓமம் இவைகளை தலா 24 கிராம் eduththu இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரில் கொட்டி கால் படியாகும் வரை சண்ட காய்ச்சி
பின் சிறிது சக்கரை சேர்த்து கலை மாலை இரண்டு வேளை அருந்த வேண்டும்.
குடல் வாயுவுக்கு கைகண்ட மருந்து. இலையை அரைத்து காலை மாலை கொட்டப்பாக்கு அளவு முன்று நாளுக்கு சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். உள்சூடு குறையும்.
கருவேப்பில்லையை இனி சமையலில் கண்டால் ஒதுக்கி வைக்காதீர்கள் .முதலில் அதை சாப்பிடுங்கள்.
கறிவேப்பிலையில்
புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு,
கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த
சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
மலச்சிக்கலைப்
போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல்,
பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற
குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.
முகத்தில்
அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி
மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள்.
பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு
மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.
கறிவேப்பிலையை
வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து
சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின்
குணமாகும்.
புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின்
வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்
கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை
எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச்
செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்
இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின்
தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை
சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள்
உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின்,
ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ
அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல
மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய
சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை
புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில்
ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன்
சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ
ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல
மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன
தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக
இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல்
கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார்
இவர்.
கறிவேப்பிலையிலிருந்து
எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும்
எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி
நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக
100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய்
எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி
தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.
கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,
இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது
இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள
கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க
பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ
குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை
அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ்
உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ.
பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர்,
வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும்
கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில்
கண்டறிந்துள்ளனர்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நீரழிவு நோயை கட்டுப்படுத்த
இதுதவிர
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10
இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால்
மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
தினசரி
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால்
நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை
வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில்
இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும்
குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம்.ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.
அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை ... மென்று சாப்பிட... ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்
No comments:
Post a Comment