பண்டைய தமிழ் மக்கள் பாரிய கட்டுமானப்
பணிகளை ஆரம்பிக்கும்போது மகிழமரக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்கள். மகிழ
மரமும் அதன் மலரின் மணமும் வித்தும் பலத்த விருத்தழயையும் பல ரோகங்களை
நீக்கும் சக்தியையும் கொண்டவை.
மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா
இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது.
இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன்
பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன்
உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை
மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப்
பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம். பூவின்
மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில் களிலும், வீடுகளிலும்
வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை
நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
மகிழ மரத்தின் மலர்கள் சக்கர
வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான
சீவகசிந்தாமணியில் “ஓடுதேர்க்கான் வகுளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இந்த மரத்தின் பூவை மணம் உடையதாகவும்,
இப்பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த
பூவில் காய்ந்த பிறகும் நறுமணம் வீசும் என்றும்,இது மகிழவனேஸ்வரர்
என்றசொல்லப்படும் சிவனுக்கு உரிய பூ என்பதால் ஆகவே இது சிவன் கோவில்களில்
மட்டுமே காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது
மருதுதுவப் பயன்கள் -: மகிழமரத்தின்
பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும்.
தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.
பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100
மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின்
குடித்துவர உடல் வலிவு மிகும்.
கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.
மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து
அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து
50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும்.
காய்ச்சல் தணியும்.
மகிழங் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.
மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம்
அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்ட் வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு,
மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப்
பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி,
கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக்.
மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை
பிறப்பின் போது எழிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.
"தாதுவைநன் மெய்யழகைச் சக்தியை உண்டாக்கிவிடுஞ்
சீதளமென்பார் கலிங்கச் செய்மருந்தாம் - வாதை
மலத்தைவிழித் தோஷத்தை வலவிஷத்தை வெப்பை
விலக்கும் மகிழம் விதை
வெகு வனலமாகு விரதமிக வுண்டா
முகர வரோசக முறியு மிகவு
மகிழத் துரு மலர்க்க",,,,,,,முகையதீன் ராவுத்தர்
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
வகுளத்தின் மருத்துவப் பயன்களுக்கு
அடிப்படையாக அமைபவை குர்சிடால், குர்சிடின், அமினோஅமிலங்கள்,
டி.குளுக்கோஸ், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்றவை.. இலை, பூ, காய்,
விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.
காமம் பெருக்கும் மலர்கள்
மணமிக்க மலர்களில் இருந்து வாசனைப்
பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில்
சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.
மலர்களின் பொடி மூக்குப்பொடியாக
உள்ளிழுக்கப்பட்டு தலைவலி போக்க உதவுகிறது. பூ தாது வெப்பமகற்றும், காமம்
பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு
நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி
சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல்
தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப்
பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி,
கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக்.
பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.
நறுமணம் மிக்க மகிழமரத்தின் பூக்களை
நுகர்ந்தலே சளி வெளியேறும், தலைவலி குணமடையும், உற்சாகம் பிறக்கும்
என்கின்றனர் மருத்துவர்கள். மகிழம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்
காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல
பயன்படுத்தலாம்.
கருவை பாதுகாக்கும்
பெண்களின் கருத்தரித்தலை
ஊக்குவிக்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர்
நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினம் 50
மில்லி காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். பழத்தை
சாறுபிழிந்து குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும்.
கனிகள் தொடர் வயிற்றுப் போக்கினை
தடுக்கும். விதைகள் வயிற்றுப்போக்கினை தூண்டக்கூடியது. குழந்தைகளின்
மலச்சிக்கலை போக்க வல்லது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இருக்கிப்
பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது.
பல்நோய் குணமடையும்
மகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு
தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு
வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக்
கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல்
உறுதிப் படும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி
பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு
மிகும்.
கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க
மகிழமரத்தின் விதைகள் பயன்படுகின்றன. விதையில் இருந்து தயாரிக்கப்படும்
மருந்து வயிற்று வலியை குணப்படுத்துகிறது. விதையில் இருந்து
தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. விதைகளை பவுடராக்கி
அதில் தேன், நெய் கலந்து சாப்பிட உடலுக்கு வலு கிடைக்கும். மகிழமரத்தின்
வேரை விழுதுபோல அரைத்து வினிகரில் கலந்து வீக்கத்தில் தடவினால் விரைவில்
குணமடையும்.
திருவொற்றியூர், திருவண்ணாமலை,
திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக
உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ
இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தம், சமண சமயத்தவரும் இதனை புனித மரமாக போற்றுகின்றனர்.
No comments:
Post a Comment