Pages

Wednesday, 5 December 2012

ஆவாரை

இதை யாரும் பயிர் செய்வது இல்லை.சாலை ஓரங்களிலும் காடுகளிலும் தானாகவே முளைத்துக் கிடக்கும்.இரண்டு அல்லது மூன்று அடி உயரத்திற்கு மேல் வளர்வது இல்லை.இதன் பூக்கள் மஞ்சள் நிறம் கொண்டவை.இதன் தண்டு துவர்ப்புச் சுவை கொண்டது.இதன் பூக்களைப் பறித்து சமைப்பது உண்டு.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்பாரும் உண்டு."ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ" என்ற சொல்வழக்கு இதன் பெருமையை உணர்த்தும்.
ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.
ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன. 


மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது.  இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.ö

இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் .
இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .
சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து  வர உடல் தங்கம் போல் ஆகும் .
இது ஒரு மொத்த  மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்,.
நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கிழை  நாட்டு வைத்திய தத்துவும் .

அந்த செல்களில் இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன ..
இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை .பின் என்றும் இளமைதான் .
இவைகளையே காயகல்ப்ப மூளிகள் என நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .எனவே அவர்கள் கூறும் காயபலப்ப மூலிகைகளை மட்டுமாவது தொடர்ந்து எதோ ஒரு தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி வாழலாம் 

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்


இது சருமவியாதி , மூகத்தினால் வரும் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது .

ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.

இதன் பூவை இனிப்புடன் கிளறி ஹாலவா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும்

2 comments:

  1. This is an amazing blog with so much of valuable content. I was looking for information on Perunthumbai and was luckily taken to this blog. Congratulations. The scholarship and effort is appreciated.

    ReplyDelete