கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள்
கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம்
கடுகிற்குத்தான். அதனால்தான் எல்லா குழம்புகளிலும் கடுகு தாளித்து
சேர்க்கிறார்கள். கடுகின் சத்துப் பட்டியலை பார்க்கலாம்......
*
கடுகு செடியில் விளையும் ஒரு வகை விதையாகும். இது துருக்கியை தாயகமாகக்
கொண்டது. ஆனால் தற்போது கனடா, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய மண்டலங்களில்
மிகுதியாக விளைகிறது. வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கடுகு
விளைகிறது.
* கருப்பு கடுகுதான் காரம் மிகுந்தது.
வெள்ளை கடுகு என்றழைக்கப்படும் கடுகு வகை கொஞ்சம் மஞ்சள் நிறத்தில்
காணப்படும். மற்ற இரண்டு கடுகு வகைகளைவிட சற்று பெரிய விதையாக இருக்கும்.
காரம் குறைந்தது. பழுப்பு கடுகு வடஇந்தியாவில் விளைகிறது.
*
கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும்
சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற
அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது.
* கடுகு
அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல்
கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட
கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும்
கடுகிற்கு உண்டு.
* போலேட்ஸ், நியாசின், தயமின்,
ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற 'பி- காம்பிளக்ஸ்'
வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு
மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும். நியாசின்
(வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
*
கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற
தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும்,
மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள்
உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த
அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன
No comments:
Post a Comment