Pages

Sunday, 16 December 2012

எப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்?

 * காலையில் இருந்து எழுந்தவுடன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மலம் கழித்தபின், சோப்பு போட்டு, கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் அவசியம்.

* வாகனம் ஓட்டி வந்த பின், உடனே கை கழுவுதல் நல்லது.

* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும்.

* கைகளை அவசர அவசரமாக, கழுவக் கூடாது. குறைந்தது, 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக் கூடாது.

* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம், 60 சதவீதம் தடுக்கலாம்

No comments:

Post a Comment