ஆப்பிள்:
வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித்
தன்மைக்கும் உதவும்.
தர்பூசணி:
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள்
பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம்
தணிக்க உதவும்.
புளி:
இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக்
குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.
சீத்தாப் பழம்:
பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள்
பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.
அண்ணாசிப் பழம்:
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம்,
கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள
நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம் பழம்:
பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில்
சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.
No comments:
Post a Comment