Pages

Wednesday, 5 December 2012

கடுக்காய்

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.
 
அழுத்தமான உள் கொட்டை பயனற்றது. இஞ்சியில் மேல் தோலும்
கடுக்காயின் உள் கொட்டையும் எப்போதும் பயன் படுத்தக்கூடாதவை.
கடுக்காய் என்ற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளிலும், காதி கிராப்ட்
கடைகளிலும் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கிறது.
கடுக்காயின் சதைப்பற்றான மேல் தோலை இடித்துத் தூள்செய்து
வைத்துக் கொண்டு, மாலை அல்லது இரவு வேளைகளில் அரை
ஸ்பூன் எடுத்து குளிர்ந்த நீரிலோ, வெந்நீரிலோ, பாலிலோ கலந்து
அருந்தலாம்.
வாயிலும் ,தொண்டையிலும், இரைப்பையிலும் ,குடலிலும் உள்ள
ரணங்களை ஆற்றிவிடும் வல்லமை பெற்றது.அது மட்டுமின்றி
 பலசிக்கல்களை ஏற்படுத்தும் மலச்சிக்கலைப் போக்கி குடல்
சக்தியை ஊக்கப்படுத்தும்.பசியைத்தூண்டி,ரத்தத்தை சுத்தப்படுத்தி,
வாதம் பித்தம்,கபம் ஆகிவற்றால் வரும் ஏராளமான நோய்களைப்
போக்கும்.ஊட்டத்தை ஊட்டி இளமையை நீடிக்க வைத்து மிடுக்கோடு
வாழவழி செய்யும்.
  கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும்
  கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ-கடுக்காய் நோய்
  ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
  ஊட்டி உடல் தேற்றும் உவந்து.
என்ற மருத்துவப்பாடல் கடுக்காய் பெற்ற தாயைவிடப் பெரியது எனப்
புகழ்கிறது. ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருதுஎன்று சித்தர்கள் கூறுகிறார்கள்.


பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப்பயனை நீட்டித்து வருகிறது.


கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும்.
இதற்குஅகஸ்த்தியர் ரசாயனம்என்று பெயர்.
முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.
உபயோகிக்கும் போது நிபுணரை ,மருத்துவரை கலந்து உபயோகிக்கவும் .
மூலிகைகள் தீங்கிலாதவை என நினைக்கவேண்டாம் .அதிலும் மூலிகை பறிப்பது சுத்தி செய்வது ,பத்தியம் ,அதை தரம் பிரிப்பது ,நேரம் போன்ற பல காரணிகள் உண்டு .
 சிறு குழந்தைகளுக்கு சந்தனக்கல்லில் சிறிது உரசி இழைத்து
பாலில் கலந்து புகட்டலாம்.
காது நோய்களுக்கும் கண்கண்ட மருந்தாகத் திகழ்கிறது
கடுக்காய் கொடுத்து விட்டான் என்று ஏமாற்றி மோசம் செய்பவர்களைக்
குறிப்பிடுவார்கள்....
புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம்.
 அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது.
 சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.கடுக்காயைஉபயோகிக்கும் போது அதை உடைத்து அதில்   உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்காய் பொடியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .
 அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
 
ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.
 
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.
 
இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் "காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.
 சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்  
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு மனிதனுக்கு அவன் இயக்கம் சரிவர தொடங்குவதற்கு தேவையானது உஷ்ணம்.  அதுவரை நிலவி வந்தது வாதம். 

இந்த உஷ்ணத்தை உடனடியாக வழங்கி வாதமென்ற உடல் விரைப்பை மாற்றி செயலாற்றத் தூண்டுகிறது இஞ்சி.  எனவேதான் காலையில் இஞ்சி. 

பின் ஏன் கடும்பகல் சுக்கு?

கதிரவன் உச்சி மீது வெயிலாக பொழிந்து உடலை உஷ்ணப்படுத்தி வியர்வையை ஏற்படுத்துகிறான்.  உடலிலிருந்து வியர்வை வெளியேறும்போது உடலின் உட்பகுதியில் ஏற்படும் மாற்றம் ,  ஒன்றிலிருந்து ஒன்று வெளிவரும்போது மற்றொன்று குளிர நேரிடுகிறது.  இதுதான் இயற்கையின் விதி.

புற உடலில் ஆவி, உடலின் உட்புறத்திலிருந்து குளிர்.  எனவே, சரீர சமநிலை மாறிவிடும். இப்படி உடலின் சமநிலை மாறிவிடும்போது இந்த நிலையை சரிகட்ட ஏற்படும் தானான முயற்சியின் விளைவே கபம்.  இந்த கபம் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்பட்ட கபத்தை அகற்றவும் கடும்பகல் சுக்கு.
பகல் முழுவதும் உடல் உழைப்பால் களைத்துவிடும் மனிதனின் வயிற்றுக்குள் இருக்கும் அனைத்து மலபந்தங்களோடு, உறவாடி விளையாடி, காலையில் அவன் எழுந்தவுடன் மலத்தை வெளியேற்றி அவன் வயிற்றை சுத்தமுறச் செய்வதுதான் கடுக்காயின் சேவை. 
 ஆக காலவரையான மண்டலம் என்ற மூன்று பட்சங்கள் தொடர்ந்து சேர்த்து வந்தால் முதியவனும் கோலை வீசிவிட்டு இளங்காளையாக மாறி குலவ ஆரம்பித்து விடுகிறான்.
மண்டலக் கணக்கு   
1 மண்டலம் என்பது 48 நாட்கள்.  மூன்று பட்சங்கள் அதாவது ஒரு பட்சம் என்பது 14 நாட்கள்,
 
பட்சங்கள் இரண்டு வகையாக உள்ளன.  சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம்.  இவை இரண்டும் சூரிய சந்திரனின் நிலைப்பாட்டினைக் கொண்ட காலக் கணக்கு.

அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சுக்ல பட்சம்.  பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிருஷ்ண பட்சம்.

இந்த பூமியின் நிலைப்பாட்டிற்கு சந்திரனின் சுழற்சி ஒரு பட்சத்தில் 1800, அதுபோல் அடுத்த பட்சத்திற்கு 1800 அப்படி 3600 ஒரு சுழற்சியை முழுமை பெறச் செய்யும் சந்திரனின் கால ஓட்டம்.  இந்த பட்சங்களே மருந்து உட்கொள்ளுவதற்கு ஏற்ற காலமாக பரிந்துரைக்கப் படுகிறது. 

இன்றும் நம் கிராமங்களில் அமாவாசை, பௌர்ணமி, அல்லது அஷ்டமி என்று எதாவது ஒன்று சொல்லி அந்த நாட்களில் குழந்தைக்கு தலையில் தண்ணீர் ஊற்றக்கூடாது என்பார்கள்.

ஏனெனில் இந்த நாட்களில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியிலும், பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களிலும் அதிகமாக செலுத்தப்படுகிறது.  அதன் விளைவாகவே கடலின் அலைகள் பேரலையாகவும், மிருகங்களின் கருவுறும் காலமாகவும்இருக்கிறது. ஏன்.. மனிதர்களின் உணர்வுகள் தூண்டப்படுவதுமாக உள்ள நிலை ஏற்படுகிறது.

தூண்டப்பட்ட உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அவன் சீரழிந்துவிடாமல் தடுப்பதற்காக வேண்டியே  விரதம் என்ற போர்வையில் (பௌர்ணமி, அமாவாசை) கடிவாளம் பூட்டப்பட்டது.

இப்படிப்பட்ட உன்னதமான சந்திர கால நிர்ணயத்தை வைத்து மண்டலக் கணக்கில் மேற்சொன்ன இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றையும் மருந்தாக கொண்டு வாழ்நாளை விருத்தியாக்கச் செய்து சுகமுடன் வாழச் சொன்னால்  இதுவே சூத்திரமும் ஆகும்.
 கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.

1 comment: