தக்காளிக்காய் – 1/4 கிலோ
கத்தரிக்காய் – 1/4 கிலோ
நிலக்கடலை – ஒரு கைப்பிடி
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
பால் (அல்லது தேங்காய்ப் பால்) – அரை கப்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4, 5
தனியா – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
-
நிலக்கடலையை ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது துவரம் பருப்போடு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
-
தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
-
நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
-
கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
-
கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.
- வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.
* ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment