Pages

Monday 17 December 2012

உடல் எடையை குறைக்க எளிய வழிமுறைகள்

 உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களை அதிகம் பாதிப்பது உடல் பருமன். உடல் உழைப்பு குறைவினாலும், மாறிவரும் உணவுப் பழக்கத்தினாலும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. எனவே உடல் பருமனை குறைக்க எளிய உணவு முறையை  அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.
 
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைக்கலாம்.  உடல் குண்டானவர்கள் பப்பாளிக்காயைச் சமைத்து சாப்பிடலாம். இதனால் உடல் மெலியும். சுரைக்காயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
 
மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் உடல் பருமன் குறையும். சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment