Pages

Monday, 17 December 2012

முருங்கைக்காய் மருத்துவ குறிப்புகள்

 * வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங்கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்திகரிக்கப்படும்.
 
* முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டிப்படும். தோல் நோய்கள் நீங்கும்.
 
* முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். மேலும், தாது விருத்தியும் உண்டாகும்.
 
* முருங்கை இலைச்சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால் ரத்தம் சுத்தமாகும். எலும்புகள் வலுவாகும். கர்ப்பிணிப் பெண்களும் இதை உட்கொண்டு வரலாம்.
 
* முருங்கை இலை காம்புகளை நறுக்கி, மிளகு ரசம் வைத்து, சாப்பாட்டுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். அதேவேளையில், அது சிறுநீரைப் பெருக்கும்

No comments:

Post a Comment