மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள்,
வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை,
ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை,
காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும்.
இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள்,
காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்களை சாப்பிட
பறவையினங்கள் பறந்தோடிவரும்.
இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின்
நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை,
கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர்.
இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன்
கொண்டவை. இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர். மேலும் அப்பைக் கோவை, ராமக்
கோவை என இருவகைகள் உள்ளன.
கண்ணுங் குளிர்ச்சிபெறுங் காசமொடு வாயுவறும்
புண்ணுஞ் சிரங்கும் புரண்டேகும்-நண்ணுடலும்
மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேருங்
கோதிலாக் கோவையிலைக்கு
(அகத்தியர் குணபாடம்)
கண் நோய் குணமாக
கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை
காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும்
கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில்
கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும்
காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
தோல் கிருமிகள் நீங்க
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து
ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக
காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி
சிரங்கு குணமாகும்.
இரத்தம் சுத்தமடைய
காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு
(பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால்
இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த
அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு
ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்
உருவாகிறது.
இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு
தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி
வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
உடல் சூடு சமநிலையிலிருக்க
தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால்
சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும்
மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை
கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள்
குளிர்ச்சிபெறும் .
வியர்க்குரு ஏற்படாமல் தடுக்க.
சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும்.
இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை
இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல்
தடுக்கலாம்.
தாது புஷ்டியாக
இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால்
இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை
மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி
நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து
தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்
கோவைக்காயை மலிவான விலைக்கு கிடைக்கும் .கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்
கோவை
சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை
உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த
வல்லது.
கோவையின்
ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக்
காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல்,
நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும்.
இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக்
கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல்
(ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம்
ஆகியவை தீரும்.
கோவைக்காயை
துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு
தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.
பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.
கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல்,
வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக
நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது
சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய்
பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண்
குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக்
கட்டுப்படுத்தும்.ஆனால் நிறையப் பேர் பாகற்காயை ஒதுக்குவதுபோல்
கோவைக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி விடுகிறார்கள். நாக்கு
சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால்
எல்லா உணவுகளுமே விருப்பமுடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே
சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35
வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல்
தடுக்கலாம்.பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண்
ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை
சேர்த்துக்கலாம்.கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும்
சுவையாக இருக்குமே. ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரவையில் அரைத்து
குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமா முற்றின கோவைக்காய்
வாங்ககூடாது. பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை
நிறத்தில் இருக்கும்.
கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து
சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய்
கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.
No comments:
Post a Comment