Pages

Sunday, 16 December 2012

கேரட் மருத்துவ பலன்கள்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும்  வராது. கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ கண்பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.

வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:

சக்தி 41 கலோரிகள்.......

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)
கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

கேரட்டை பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும். வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கேரட்டில் இருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment