Pages

Sunday, 16 December 2012

துளசியின் மருத்துவ குணங்கள்


• துளசிச் செடியை ஆராக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
 
• ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
 
• நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.    
 
• துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
 
• சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரைஅளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.
 
• சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடேவ உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்னை சரியாகும்.

No comments:

Post a Comment