தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம். தாய் பத்தியமான உணவை உட்கொள்ளாவிட்டால் தாய்ப்பால் தன்மையில் மாறுதல் ஏற்பட்டு குழந்தைக்கு பேதி ஏற்பட்டு விடும். தாய் அதிக பசியுடன் இருப்பது சரியாக உணவு உண்ணாமல் இருப்பது மோகம் போன்ற ஏக்கங்களில் தவிப்பது போன்ற காரணங்களாலும் தாய்ப்பால் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உருவாகலாம்.
இதனால் ஒரு நாளைக்கு
பல முறை குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். பச்சிளம் குழந்தைக்கு
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக தகுந்த டாக்டரை அணுகி மருத்துவ
ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது அவசியம் ஆகும்.
• உடலில் வலி இருந்தால் குழந்தை விடாமல் தொடர்ந்து அழுது கொண்டு இருக்கும்.
•
உடலில் எங்கு வலியோ அல்லது நோயோ தோன்றினால் அந்த இடத்தை குழந்தை அடிக்கடி
தொட்டபடி இருக்கும். ஆனால் பிறரை அந்த இடத்தை தொட விடாது.
• தலைவலியால் அல்லது தலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தை கண்களை மூடியபடியே இருக்கும்.
No comments:
Post a Comment