• கீழே விழுந்து அடிபட்டு உடலில் காயம் ஏற்பட்டால் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து இதில் தெளிவான கசாயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காயத்தை கழுவி பின்னர் திரிபலா சூரணத்தை காயத்தின் மீது தூவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் காயம் வேகமாக குணமடைந்து வரும்.
• அடிபட்ட காயத்தில் ரத்தக் கசிவு அதிகமாக இருந்தால் லாக்ஷா(அரக்கு) என்ற ஆயுர்வேத சூரணத்தி காயத்தில் வைத்து கட்ட வேண்டும்.
• சளி, இருமலுக்கு தாளி சாதி சூரணத்தை குழைத்து தேனில் அடிக்கடி கொடுக்கலாம்.
• இருமலுக்கு ஆடாதோடை கசாயத்தை தேனுடன் அடிக்கடி குடித்து வரலாம்.
• கண் சிவந்து இருந்தால் கண்ணில் தாய் பால் விடவும். படிகப் பன்னீரை கண்களில் இடலாம்.
•
புண்கள் குணமடைய வேப்பிலை, மஞ்சள்,ஆலம் பட்டை, அரசம் பட்டை ஆகியவற்றால்
தயாரிக்கப்பட்ட கசாயம் மூலம் காயத்தை கழுவ வேண்டும். பின்னர் திரியலா
சூரணத்தை புண்ணுக்கு மருந்தாக போடலாம்.
No comments:
Post a Comment