Pages

Sunday, 16 December 2012

தலைவலியே வாழ்க்கையா?

 ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தலைவலியை ஒரு முறையாவது சந்தித்து இருப்போம். சாதாரணமாக வரும் தலைவலி, வலி மாத்திரைகளாலும் ஓய்வு எடுப்பதாலும் சரியாகி விடுகிறது. அதுவே சிலருக்கு ஆபத்தானதாக அமைந்து வாழ்நாளில் பெருந்தொல்லையாக அமைந்து விடுகிறது.

ஒரு வருடத்தில் தொண்ணூறு சதவீதம் மக்கள் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதில் தொண்ணூறு சதவீதத்தினருக்கு மேல் கண், காது, மூக்கு மற்றும் மூளைகளில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உலக அளவில் நீண்ட நாட்களுக்கு வரும் தலைவலியான கிரானிக் மைகிரேன் தலைவலியால் பாதிக்கப்படுகிறவர்கள் இரண்டு சதவீதம், இதில் முறையாக கண்டுபிடிக்கப்படாதவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மற்ற வகை சேர்ந்த தலை வலிகளை கிரானிக் மைகிரேன் தலைவலியாக தவறாக கணிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். இவ்வாறு அமெரிக்கன் மைகிரென் தடுக்கும் அமைப்பு, அதன் ஆய்வின் படி கூறுகிறது.

தலைவலியில் இரண்டு வகைகள் உண்டு:-

1. பிரைமரி தலைவலி.
2. செக்கென்டரி தலைவலி.

செக்கென்டரி தலைவலி என்பது உடலில் உள்ள வேறு சில பிரச்சனைகளால் வருவது. பார்வை கோளாறு, சைனஸ் தொந்தரவு, காது பிரச்சனை மற்றும் கபாலத்தில் ஏற்படும் ஏனைய நோய்களால் வரும் தலைவலியே இந்த செக் கென்டரி தலைவலி எனப்படும். இவ்வகையான தலைவலியை அந்தந்த பகுதியை ஆய்வு செய்வதாலும் தலைவலியுடன் கூடிய மற்ற அறிகுறிகளை வைத்தும் கண்டுபிடிக்கலாம். அவ்வாறு கண்டுபிடித்து முறையே மூலக் காரணமான நோயை சரி செய்தால், தலைவலியை முழுவதும் குணப்படுத்தலாம்.

பிரைமரி தலைவலிகளில்..............

மூன்று வகைகள் உண்டு.

1. மைகிரேன் தலைவலி என்ற ஒற்றைத் தலைவலி. ஒரு புறமாக நாடி துடிப்பது போலவும் வேலை செய்தால் அதிகமாவதும் குமட்டல் மற்றும் வாந்தியுடன் ஒலி மற்றும் ஒளி ஒவ்வாமையுடன் காணப்படும்.

2. டென்சன் தலைவலி என்பது மன அழுத்தத்தாலும் தலை மற்றும் கழுத்தை சுற்றியுள்ள தசைகளின் சோர்வாலும் ஏற்படுகிறது. இத்தகைய தலைவலி எந்நேரமும் கடுமையாக இல்லாமல் தலைமுழுவதும் வரும்.

3. கிளஸ்டர் தலைவலி என்பது சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ தொடர்ந்து வரும் பின் மறைந்து போகும். இத்தகைய தலைவலி ஒற்றைத் தலைவலி போல இருக்கும். அதே நேரம் கண்ணைச் சுற்றி ஒரு வகையான இறுக்கமும் வலியும் உண்டாகும்.

நீண்ட நாள் தலைவலிக்கு சிகிச்சை:-

தற்காலிக வலி நிவாரண சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை என இந்த சிகிச்சைகளில் இரு வகையுண்டு. இதில் முதல் படியாக கூறியது வந்த வலியை தற்காலிகமாக உடனே சரி செய்வதை குறிக்கும். இந்த வகையான சிகிச்சை மைகிரேன் தலைவலிக்கு உகந்தது. எனினும் மைகிரேன் தலைவலி வராமல் தடுக்கும் நோய் தடுப்பு சிகிச்சை தான் எங்கள் வலி நிவாரண மருத்துவத்தின் சிறப்பு அம்சமாகும்.

முதல் குறிக்கோளாக தலைவலியின் வீரியத்தையும் கடுமையையும், நீடிக்கும் காலத்தையும் குறைப்பதாகும். இதற்காக நோயாளிகளை கலந்தாய்வு செய்து, தீவிர பரிசோதனைக்கு பின் அவர்களுக்கு நீண்ட நாள் மைகிரேன் தலைவலியா என்பதை கணித்து அவர்களுக்கு நோயின் தன்மைகளையும் அதன் சிகிச்சைகளையும் விளக்கி, உரிய சிகிச்சை எதுவென்றும் அதனை செயல்படுத்துவதே எங்கள் வெற்றிக்கு காரணம்.

நோயாளிகளின் இதர நோய்களை மனதில் கொண்டு அவர்களுக்கு சரியான மாத்திரைகளாக அமிட்டிரிப்டலின், புளு ஆக்செஷன், காபாபென்டின், டிஸானிடின், டோபிஏமைட் மற்றும் புரோபனலால் ஆகிய மாத்திரைகளில் ஒன்றை கொடுப்பது முதல் படி ம் பொழுதுபோக்கு, ஓய்வு, டிரெயினிங், பயோபீட்பேக் டிரெயினிங், மன அழுத்தத்திற்கான சிகிச்சை ஆகியவைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கப்படும்.

வாழ்க்கை முறை மாற்றம்:-

* சரியான தூக்கம், உடற்பயிற்சி, உணவுமுறை, மன அழுத்தம் நீங்கும்  பயிற்சி ஆகியவை முறையே கற்றுக் கொடுக்கப்படும்.

* கழுத்து, தலை மற்றும் தோள்பட்டையின் சம நிலை  (POSTURE) மிகவும் கவனமாக சரி செய்யப்பட வேண்டும்.

* உணவுப் பொருள் மற்றும் மற்ற மாத்திரைகள் தலைவலியை ஊக்குவிப்பதாக இருந்தால் அதை மாற்ற வேண்டும். *

No comments:

Post a Comment