Pages

Sunday, 16 December 2012

வலி என்றால் என்ன?


வலி என்பது உடலில் உள்ள ஒரு நோயை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறி. மூன்று மாதங்களுக்குள் மட்டும் இருக்கும் வலியை அக்ïட் பெயின் என்றும் அதற்கு மேல்பட்டு இருக்கும் வலியை கிரானிக் பெயின் என்றும் கூறுகிறோம்.

வலி எதனால் ஏற்படுகிறது?

வலி மட்டும் அல்லாது எந்த ஒரு உணர்ச்சியையும் மூளைக்கு உணர வைப்பது நரம்பு மண்டலம். நரம்புகள் பரவியிருக்கும் உறுப்புகளில் சிதைவு ஏற்படுமேயானால், அங்கே ஒரு ரசாயன மாற்றம் உண்டாகி, அது மின் அலையாக நரம்பினால் கடத்தப்பட்டு தண்டு வடத்தில் பயணம் செய்து மூளையை அடைகிறது.

ஏனைய மருத்துவத்தைவிட சிறந்த வலி மருத்துவம்....

மூன்று மாதத்திற்கு மேற்பட்ட வலியிருப்பின் அதற்கான சிகிச்சை பெற வேண்டும். கீழ் முதுகு வலி, சையாடிகா என்னும் கால்களில் பரவும் வலி, கழுத்து வலி, பிரோக்கியால்ஜியா என்னும் கைகளில் பரவும் வலி, நடுப்புறத்தட்டின் (டிஸ்க்) பிரச்சினையை ஆர்த்ரைட்டிஸ் என்னும் மூட்டு வலி, தலைவலி, கேன்சர் வலி, உடம்பு வலியான பைப்ரோ மையால் ஜியா மற்றும் மையோ பேசியல் பெயின் ஸின்ரோம், பெயில்டு பேக் ஸர்ஜரி ஜின்ரோம், கார்பல் டன்னல் சின்ரோம் போன்ற சிறப்பு சிகிச்சைகள் உள்ளன.

No comments:

Post a Comment