மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகளைப்
பூர்வீகமாகக் கொண்ட பப்பாளி, 17ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது.
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. எளிதில்
கிடைக்கக்கூடிய, விலை மலிவான பப்பாளி, மிகவும் இனிப்பானது.
பழுக்காத
காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சள் நிறத்திலும்
இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பான
சுவையுடையவை. நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள
பப்பாளி, சற்று எண்ணைப் பசையாக உள்ள பழமாகும்.
இது
உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்துக்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில்
உதவும். கல்லீரலுக்கு ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு பப்பாளியே
அருமருந்து.
பப்பாளியில் உள்ள சர்க்கரையில் பாதி
குளுக்கோஸாகவும், மீதி பிரக்டோஸாகவும் (பழச் சர்க்கரை) உள்ளது. பழங்களிலேயே
வைட்டமின் 'ஏ' சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க
வைட்டமின் 'சி' கூடும்.
100 கிராம் பச்சைக் காயான
பப்பாளியில் வைட்டமின் 'சி' 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில்
40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி
கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் வைட்டமின்
'சி' இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பப்பாளியில்
சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு. பச்சைக்
காயில் உள்ள பாலில் செரிமானத்துக்கு உதவும் நொதிப்பொருட்கள் உள்ளன. அதற்கு
'பப்பாயின்' என்று பெயர். இது புரதத்தைச் செரிக்க உதவும். நிறையப் பருப்பு
உணவுகளை உண்டபின், சில பப்பாளித் துண்டுகளைச் சாப்பிட்டால் நன்றாகச்
செரிமானம் ஆகிவிடும்.
No comments:
Post a Comment