பச்சைப் பயறு – 1 கிலோ
பச்சை மிளகாய் – 6, 7
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
தாளிக்க: எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
- பச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைக்கவும்.
- நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.
- தேங்காய், 4 பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிச்சமிருக்கும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கியது, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.
* அரைத்த விழுதை, பயறில் பத்து நிமிடங்கள் பிசிறிவைத்து, தாளித்தும் செய்யலாம். இதில் நன்றாக சுவை உள்ளே ஊறியிருக்கும். சீக்கிரம் வதக்கி இறக்கிவிடலாம்.
No comments:
Post a Comment